லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் சேட்டைகளை கட்டுப்படுத்த லங்கூர் குரங்குகளின் கட்டவுட் வைத்த ரயில்வே நிர்வாகம்!
லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் லங்கூர் குரங்குகளின் கட்டவுட்களை வைத்துள்ளது.
ரயில் நிலையத்தில் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகள் பயணிகளின் உடமைகளை பறித்து செல்வதாக கூறப்படுகிறது. குரங்குகளின் சேட்டைகளை கட்டுப்படுத்த நினைத்த ரயில் நிலைய நிர்வாகம் லங்கூர் வகை குரங்குகளின் கட்டவுட்களை நிலையத்தில் ஆங்காங்கே வைத்துள்ளது.
லங்கூர் குரங்குகளின் கட்டவுட்களை காணும் மற்ற குரங்குகள் நிலையத்தில் நுழைவதை தவிர்ப்பதாக நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments